தினமும் பிளாக் டீ குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா.? வேறு என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா.!?Disease caused by drinking black tea regularly

பொதுவாக நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். ஒரு சிலர் டீயுடன் பால் சேர்க்காமல் பிளாக் டீ குடிப்பதை விரும்புகின்றனர். இவ்வாறு பிளாக் டீ குடிப்பது உடலுக்கு ஒரு சில நன்மைகளை கொடுத்தாலும், தினமும் தொடர்ந்து காலையில் டீ குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Black tea

பிளாக்

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒரு சிலர் பிளாக் டீயுடன் புதினா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வருகின்றனர். எலுமிச்சை மற்றும் புதினா சேர்த்து குடிக்கும் போது இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, சருமத்தை பளபளப்பாக இருக்கவும் செய்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பிளாக் டீயூடன் இஞ்சி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்புகள் எளிதாக கரைந்து விடுகிறது.

இதையும் படிங்க: பெற்றோர்களே.! உங்கள் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் குடுக்கிறீங்களா.? உங்களுக்கு தான் இந்த செய்தி.!?

Black tea

பிளாக்

டீ குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்

தினமும் பிளாக் டீ குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பிளாக் டீ குடிப்பதால் கிரியேட்டின் அளவு உடலில் அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எலுமிச்சை மற்றும் தேநீர் இயற்கையாகவே அமிலத்தன்மையை கொண்டுள்ளது என்பதால் இதை அடிக்கடி குடிக்கும் போது உடலில் அமிலத்தன்மை அதிகரித்து நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது என்பதால் இதனை அடிக்கடி குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கோதுமை மாவுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க.!?