சுந்தர் சியை கெட்ட வார்த்தையில் திட்டி சாணி அள்ள வைத்த பிரபல நடிகர்.!?
சுந்தர் சியின் திரைப்பயணம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனதாகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் முதன் முதலில் 1990 ஆம் வருடம் மணிவண்ணன் இயக்கிய வாழ்க்கை சக்கரம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இதன் பின்னர் தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக 5 வருடம் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து ஹிட் படங்கள்
பின்னர் 1995ம் வருடம் முதன்முதலில் முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். சுந்தர் சியின் முதல் படமே மிகப் பெரும் வெற்றி படமாக அமைந்தது. இதன் பிறகு மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற பல ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து பிரபலமான இயக்குனராக வலம் வந்தார்.
இதையும் படிங்க: வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய இந்த 4 சைவ உணவுகளை சாப்பிட்டு பாருங்க.!?
சமீபத்தில் சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை 4 வெளியானது. இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இது போன்ற நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுந்தர் சி, அவர் உதவி இயக்குனராக இருந்தபோது நடந்த நிகழ்வுகளை பற்றி கலகலப்பாக பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சுந்தர் சியை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன்
சுந்தர் சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதாவது, "மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது முதல் நாள் படப்பிடிப்பு பொள்ளாச்சி, ஆனைமலை ரோட்டில் நடைபெற்றது. அப்போது சத்யராஜ் சார் பைக்கில் வருவார். அந்த ரோட்டில் கேமரா வைத்து விட்டார்கள். கேமராவில் முன் சாணி இருந்தது. அதை பார்த்துவிட்டு மணிவண்ணன் சார் என்னை சாணி அள்ள சொன்னார். நான் இன்னொரு உதவி இயக்குனரிடம் சாணி அள்ளு என்று கூறினேன். அதற்கு மணிவண்ணன் சார் என்னை சொல்ல முடியாத கெட்ட வார்த்தையில் திட்டி சாணி அள்ள வைத்தார். அப்போ சாணி அள்ளியது. இப்போது வரை உதவுகிறது. முன்னுக்கு வர வேண்டும் என்றால் எந்த காரியத்தை செய்யவும் யோசிக்க கூடாது" என்று பேசியிருந்தார்.
இதையும் படிங்க: சிறுநீரகத்தை பாதுகாக்க மது அருந்துவதற்கு முன் இந்த உணவை கட்டாயமாக சாப்பிடுங்க.!?