இரண்டு கோழிகளுக்கு இடையே நடந்த பரபரப்பு சண்டை! நடுவராய் செயல்பட்ட நாய்! வைரல் வீடியோ!

cock fight, dog umpire


cock fight, dog umpire


தற்போதைய வாழ்க்கை முறையில் பல வினோதமான விஷயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. டிக் டாக் வந்ததில் இருந்து மனிதர்களின் வீடியோ பதிவு பிறரை ஆர்வத்துடன் பார்க்கவைக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் உயிரை பணயம் வைத்து வீடியோ எடுத்து பகிர்கின்றனர்.

மனிதர்களின் வினோதமான செயல்களை தாண்டி விலங்கினங்களும் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் பாம்பு ஒன்று டின் பீர் பாட்டிலுக்குள் தலையை விட்டு மாட்டிகொண்ட வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதேபோல் எலி ஒன்று முட்டை ஓட்டிற்குள் தலையை விட்டு திண்டாடும் வீடியோவும் வெளியானது. 

இதனையடுத்து தற்போது, இரண்டு கோழிகள் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நாய் ஒன்று நடுவார்போல் இருந்து இரண்டு கோழிகளையும் விலக்கிவிட்டு, சண்டையிடவைக்கின்றது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.