அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களா நீங்கள்?.! உங்களுக்குத்தான் இந்த செய்தி..!!

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களா நீங்கள்?.! உங்களுக்குத்தான் இந்த செய்தி..!!


cesarean-delivery-doctor-advice

அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு வலி இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிகமான ரத்தப்போக்கு, வீக்கம் மற்றும் ரத்த உறைவு ஆகியவற்றால் தசைகள் மற்றும் திசுக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும். இவைகள் முழுமையாக குணமடைவதற்கு குறைந்தபட்சம் 12 மாதங்களாவது ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு  கிட்டத்தட்ட 4 முதல் 5 மாதங்களுக்கு பின்னரே உடல் இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த 4 மாத இடைவெளியில் நன்றாக ஓய்வு எடுக்கும்போது, ரத்தப்போக்கு குறைந்து பின் நின்று விடுகிறது. பொதுவாக குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் ரத்தப்போக்கு தானாகவே குறைந்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு ஒரு மாத காலம் கூட சிறிது சிறிதாக ரத்தப்போக்கு ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் சிசேரியன் முறையால் கர்ப்பப்பையில் இருக்கும் "யூட்ரின் தசையில்" நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே அது மீண்டும் பழைய நிலையடைய குறிப்பிட்ட காலம் தேவைப்படும். முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளி இருப்பது சிறந்ததாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் மீண்டும் இரண்டாவது குழந்தை பெற விரும்பும் போது, மகப்பேறு மருத்துவரிடம் உடலை நன்கு பரிசோதனை செய்து ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்த பிறகு குழந்தைக்கு திட்டமிட வேண்டும். அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றவர்களில் 70% பெண்களுக்கு அடுத்த சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது. 

cesarean

குழந்தை பிறந்த 6 மணி நேரத்திற்கு பழச்சாறு, பால் போன்ற திரவ உணவுகளை சாப்பிட வேண்டும். இதன்பின்னரே திட உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பல பெண்கள் இடியாப்பம், சர்க்கரை உள்ளிட்ட நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிடுகின்றனர். அதனை தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள காராமணி, பீன்ஸ், கேரட் மற்றும் கீரை உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

இல்லையெனில் கொண்டைக்கடலை, முட்டை மற்றும் பச்சை பட்டாணி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிடலாம். அறுவை சிகிச்சைக்கு பின் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, அசைவ உணவுகளை உண்ணலாம். சிசேரியன் முடிந்த பின் தையல் போட்ட இடங்களில் தண்ணீர் பட்டால் ஏதாவது ஆகிவிடுமோ? என்று பல பெண்களும் அச்சப்படுகின்றனர். 

அது தவறான கருத்தாகும். தையல் போட்ட இடங்களில் அழுக்கு சேராதவாறு சுத்தமாக குளிக்க வேண்டும். மேலும் வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சியும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.