லைப் ஸ்டைல் General

மசாஜ் செய்ய வந்த இடத்தில் உல்லாசம்! நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த தொழிலதிபர்

Summary:

businessman lost gold and money in massage centre

சென்னையில் வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த தொழிலதிபரை மயக்கி அவருடன் உல்லாசமாக இருந்து, நண்பர்களின் உதவியுடன் தொழிலதிபரின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாதவரத்தை அடுத்த பெரிய மாத்தூர், பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் நிர்மலா (27). திருமணமாகிய இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அண்ணாநகரில் இருக்கும் தனியார் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கே அடிக்கடி மசாஜ் செய்ய வரும் கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்திக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நிர்மலா வேலையை விட்டுவிட்டு, தனது வீட்டிலேயே மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். கடந்த வாரம் நிர்மலாவை தொடர்பு கொண்ட கிருஷ்ணமூர்த்தி என்ற தொழிலதிபர் தனக்கு மசாஜ் செய்ய வேண்டும், என கேட்டுள்ளார். நிர்மலா அவரை மாதவ்ராத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதன் படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மலாவின் வீட்டிற்கு கிருஷ்ண மூர்த்தி சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த அவரிடம் தனது தோழி ஷீலா (30), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரை நிர்மலா அறிமுகம் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் நிர்மலா மற்றும் ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். சிறிது நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் நிர்மலாவின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து, கிருஷ்ணமூர்த்தியை கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த 2 சவரன் நகை மற்றும் 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பதறிப்போன கிருஷ்ணமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டர் நடத்திய நிர்மலா, தோழி ஷீலா, ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகியோரை பிடித்து தீவிரமாக விசாரித்த போது, பிடிபட்ட மூவரும் தங்களது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து, தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் நகை, பணத்தை பறித்து, அதை பங்கு போட்டு கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தொழிலதிபரிடம் நகை, பணத்தை பறித்து சென்ற கார்த்திகேயன் (35), புகழேந்தி (32), லட்சுமணன் (35), அருண்குமார் (37) உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் பலரிடம் இதுபோல பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 7 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Advertisement