தாலி கட்டுவதற்கு முன் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! அதுவும் இரண்டாவது திருமணம்! காரணம் என்ன?

தாலி கட்டுவதற்கு முன் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! அதுவும் இரண்டாவது திருமணம்! காரணம் என்ன?



bride stopped marriage before 2 hrs

திருப்பூரில் திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வரதட்சணை குறித்து, மணமகன் உறவினர்கள் கேள்வி கேட்டதால், அதிருப்தி அடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலட்சுமிக்கு (24) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கிய மகா பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த வைரமணி (27) என்பவர், மகாலட்சுமியை திருமணம் செய்யதுக்கொள்ள  விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த மகா, பின்னர் சில நிபந்தனைகளுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அதில் மிக முக்கியமானது வரதட்சணை எதுவும் கேட்கக்கூடாது என்பது தான். இதற்கு வைரமணி வீட்டார் சம்மதிக்கவே இருவீட்டாரும் சேர்ந்து திருமணம் பேசி முடித்தனர்.

bride stopped marriage before 2 hrs

இதனைத்தொடர்ந்து நேற்று காலை செல்லம் நகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது திருமணத்திற்கு வந்த வைரமணியின் உறவினர்களில் ஒருவர் மகாலட்சுமியிடம் வரதட்சணை குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த வைரமணியின் பெற்றோர், மகாலட்சுமியிடம் எடுத்துக்கூறியும், திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து மணமகனின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகாலட்சுமியும் தனது பங்குக்கு மணமகன் வீட்டார்  வரதட்சணை கேட்பதாக புகார் அளித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு உருவாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் மகாலட்சுமி எதற்கும் உடன்பாடவில்லை. இதனால் இந்த திருமணம் பாதியிலே நின்றுவிட்டது.