கல்யாண வீட்டில், அத்தனை பேர் முன்பும் மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க..! வைரலாகும் வீடியோ..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். பொதுவாக ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்கள் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் ஓன்று அவர்களது திருமண நாள். அதனால்தான் சொந்தபந்தங்கள் புடைசூழ, பல லட்சம் செலவு செய்து நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கின்றனர்.
பொதுவாகவே வெட்கபடும் பெண்கள் திருமண நாள் என்றால் சொல்லவா வேண்டும். தமிழ் கலாச்சாரம் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும், திருமணம் என்றாலே பெண்களுக்கு அந்த வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ளும். ஆனால், இப்போதைய தலைமுறை மாறிவிட்டது. தங்களது திருமணத்தில் மணப்பெண்களே குத்தாட்டம் போடத் துவங்கிவிட்டனர்.
அப்படி ஒரு சம்பவம் கேரளத்தின் கண்ணூரில் நடந்த திருமணவிழாவில் நடந்துள்ளது. அஞ்சலி என்ற பெண்ணுக்கும், வருண் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாப்பிளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்த மணமகள் தனது தோழிகளுடன் பாட்டு ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டே மணமேடைக்கு வரும் காட்சி விடியோவாக பதிவாகி வைரலாகிவருகிறது.