கருப்பு நிற ஆப்பிளை பற்றி உங்களுக்கு தெரியுமா.. இதில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா.?

கருப்பு நிற ஆப்பிளை பற்றி உங்களுக்கு தெரியுமா.. இதில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா.?



black-apple-benefits

நாம் தினமும் அன்றாட உணவில் ஒரு ஆப்பிளையும் சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். ஆப்பிளில் சிவப்பு, பச்சை போன்ற நிறங்கள் உள்ளன என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

Apple

ஆனால் கருப்பு நிற ஆப்பிள்களும் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.  சிவப்பு மற்றும் பச்சை நிற ஆப்பிள்களில் கிடைக்காத சத்துக்கள் கருப்பு நிற ஆப்பிள்களில் இருக்கின்றன என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த கருப்பு ஆப்பிளின் விலை சாதாரண ஆப்பிள்களின் விலைகளை விட மிகவும் அதிகமாக இருந்து வருகின்றன. இதற்கு காரணமாக கூறப்படுவது கருப்பு ஆப்பிள்களை விளைவிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

Apple

சாதாரண ஆப்பிள் மரங்கள் வளர்வதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் கருப்பு நிற ஆப்பிள்கள் வளர்வதற்கு 8ஆண்டுகள் வரை ஆகின்றது. மேலும் இவற்றிற்கு பல பக்குவங்கள் பார்க்க வேண்டி இருப்பதால் கருப்பு நிற ஆப்பிள்கள் விலை அதிகமாக காணப்படுகின்றன என்று கூறப்பட்டு வருகிறது.