உடல் சூட்டை தணித்து, தொண்டை வலியை குறைக்கும் அகத்திக்கீரை.. நன்மைகள் என்னென்ன?.!  

உடல் சூட்டை தணித்து, தொண்டை வலியை குறைக்கும் அகத்திக்கீரை.. நன்மைகள் என்னென்ன?.!  


akathikeerai benefits tamil

அகத்திக்கீரை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

★அகத்திக்கீரை தைலத்தில் குளித்து வருவதால் பித்தம் தணிந்து எரிச்சல், மயக்கம் மற்றும் புகைச்சல் போன்றவை குணமாகும்.

★அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்கும்.

★தொண்டை வலி மற்றும் தொண்டை ரணம் போன்றவற்றிற்கு அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாறு விழுங்கினால் நல்ல மருந்தாகும்.

★பால் கொடுக்கும் தாய்மார்கள் அகத்திக்கீரை சாப்பிடுவதன் மூலம் பால் நன்கு சுரக்கிறது. மேலும், மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

★வாரத்திற்கு இரண்டு நாட்கள் அகத்திக் கீரையை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை சரியாகும். ஜீரண சக்தியையும் பெருக்கும்.

★அகத்திக்கீரை சாற்றை எடுத்து நெற்றியில் தடவி ஆவிப்பிடிக்க தலைவலி நீங்கும்.

★இந்த கீரையை அரைத்து பற்றுப்போட்டால் அடிபட்ட வீக்கங்கள் உடனடியாக குணமாகும்.

★அகத்திக்கீரையுடன் மிளகு மற்றும் தேங்காய் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் வாய்ப்புண் குணமாகும்.