சினிமா

சமூக பணியில் களம் இறங்கிய தல ரசிகர்கள் ; அரசியலுக்கு அடித்தளமா?

Summary:

ajith in politics

சென்னையில் உள்ள  கொரட்டூர்ஏரியை சுத்தம் செய்யும் பணியில்  அஜித் ரசிகர்கள் ஈடுபட்டது. அஜித்தின் அரசியலுக்கு அடித்தளமா! 
சென்னை அரக்கோணம் தொடர்வண்டி பாதையின் வடக்கில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரியானது 990 ஏக்கர் பரப்பளவாகும்.


சென்னையில் 1970களுக்கு முன் நீர் பற்றாக்குறை நிலவிய காலங்களில் இந்த ஏரி நீர் தான்  மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஏரியில் சுற்றியுள்ள பட்டரவாக்கம், ஆத்திபேட்டை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளின் சாக்கடை நீரும், தொழிற்சாலை கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாமல் இந்த ஏரியில் கலக்கவிடப்பட்டதால் ஏரி நீர் மாசடைந்தது.இந்நிலையில்  ஏரியை சுத்தம் செய்யும் பணியை நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் மன்றம் சார்பில் செய்து வருகின்றனர்.இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அஜித் படம் வெளியீட்டில் மட்டும் தலையை காட்டும் நடிகர் அஜித் ரசிகர் மன்றம் தற்போது சமூக பணியில் ஈடுபட்டு  வருவது நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளமாக இருக்குமோ என ஏதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement