அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி..!

அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி..!



Aachu muruku recipe

அச்சு முறுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சுவைத்து சாப்பிடும் ஒரு வகையான நொறுக்கு தீனி. சுவைமிகுந்த இந்த முறுக்கை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
மைதா மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
தேங்காய் பால் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி

Aachu muruku

முதலில் துருவிய தேங்காயை 1/2 கப் எடுத்து வெது வெதுப்பான தண்ணீர் சேர்ந்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும். பின் அரிசி மாவு,மைதா மாவு,உப்பு,சர்க்கரை,தேங்காய் பால்,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

மாவு அச்சில் எடுத்தால் சொட்டாமல் இருக்க வேண்டும். எண்ணெய்யை காயவைத்து அதில் முறுக்கு அச்சை வைத்து சூடாக்கவும்.பின் கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெய்யில் விட்டு லேசாக அசைக்க வேண்டும். முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து பொன்னிறமாக வரும். பிறகு எண்ணெய்யை வடித்து எடுக்கவேண்டும். தற்போது சுவையான அச்சு முறுக்கு தயார்.