ஓட்டத்துக்கும், சிரிப்புக்கும் பின்னாடி எத்தனை வேதனைகள்?.. நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்ற வீடியோ.!

ஓட்டத்துக்கும், சிரிப்புக்கும் பின்னாடி எத்தனை வேதனைகள்?.. நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்ற வீடியோ.!


a-man-running-toll-plaza-water-bottle-sales-video

நாம் பயணம் செய்யும் போது பெரும்பாலும் சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் தண்ணீர் கேன், பழங்கள், பயண நேர சிற்றுண்டிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நபர்கள் ஓடோடி அனைத்தையும் விற்பனை செய்வார்கள். 

நாமும் தேவையான உணவு அல்லது தண்ணீர் போன்றவற்றை வாங்குவோம். இதில், அவர்களிடம் பொருளை வாங்க நமக்கு சில நொடிகள் மட்டும் இருக்கும். அதில் எந்த வித ஏமாற்றுதலும் இல்லாமல் இருவரும் செயல்படுவோம். சிலர் அதில் விதிவிலக்குடன் இருப்பார்கள். 

இவ்வாறான அவர்களின் துணிவு ஓட்டத்திற்கு பின்னணியில் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பங்கு இருக்கிறது. அதனைப்போன்றதொரு வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ யாரால் ? எப்போது ? எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால், வீடியோவின் பின்னணியில் உள்ள காட்சிகளை கவனித்தால் கர்நாடகா - மஹாராஷ்ட்ரா மாநில எல்லைப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியாக இருக்கலாம் என தெரியவருகிறது.