லைப் ஸ்டைல்

வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு தண்ணீரை தேடிவரும் மலைப்பாம்பு..! பிரமிக்கவைக்கும் வைரல் வீடியோ.!

Summary:

A Huge Python Cools Down In Water After A Meal In This Viral Video

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மலைப்பாம்பு ஒன்று தண்ணீர் தொட்டியை தேடிவரும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுஷாந்த நந்தா அவர்கள் அவ்வப்போது மிகவும் சுவாரசியமான வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மிக பெரிய மலைப்பாம்பு ஒன்று வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு தண்ணீர் தொட்டியை தேடிவரும் வீடியோ ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்.

சுமார் 1 நிமிடம் 36 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெரிய மலைப்பாம்பு ஒன்று தண்ணீர் தொட்டியை நோக்கி வருகிறது. மேலும் சமீபத்தில்தான் அந்த மலைப்பாம்பு ஏதோ ஒரு விலங்கை வேட்டையாடிய நிலையில் அந்த விலங்கின் உடல் முழுவதும் மலைப்பாம்புக்குள் இருக்கும் காட்சியும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement