சேவல்களுக்குள் அடிதடி சண்டை.. சமரசம் செய்யும் வாத்து.. வீடியோ உணர்த்துவது என்ன?..!

சேவல்களுக்குள் அடிதடி சண்டை.. சமரசம் செய்யும் வாத்து.. வீடியோ உணர்த்துவது என்ன?..!


a-duck-try-to-control-chicken-cock-fight

மனிதனின் சிந்தையில் என்று தனக்கு என்ற ஒரு அகராதி உருவானதோ அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு சண்டைகள் நிகழ்ந்து வருகின்றன. நாட்டிற்காக, இருப்பிடத்திற்காக, உரிமைக்காக, அநியாயத்திற்கு எதிராக என ஒவ்வொரு சூழ்நிலையிலும் பல சண்டைகள் நடைபெறுகிறது. இதில் சில உயிரிழப்பில் முடியும். 

இன்றளவில், பெரும்பாலும் வீதிகளில் அல்லது வீடுகளில் சண்டைகள் நடந்தால் அடுத்தவர் பிரச்சனை நமக்கென்ன என செல்லத் தொடங்கிவிட்டோம். முந்தைய காலங்களில் குடும்ப சண்டையோ, ஜாதி சண்டையோ, மத சண்டையோ, நாட்டு சண்டையோ எதோ ஒரு உக்தியில் பேசி தீர்க்க முடிவு செய்யப்படும். இயலாத பட்சத்தில் போர் தான். 

Watch Video Click Here: https://www.facebook.com/groups/199095810430706/permalink/1724519051221700/

மனிதனுக்கு மனிதன் சண்டை நடந்தால் சமாதானம் செய்ய தயங்கும் இந்த வேலையில், கோழிகளுக்கு இடையே நடக்கும் சண்டையை வாத்து ஒன்று தடுத்து நிறுத்துகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஆறறிவு மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை கண்டுகொள்ளாமல் செல்வோர் மத்தியில், சேவல்களுக்கு இடையே நடக்கும் சண்டையை வாத்து தடுக்கிறது என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.