பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி தொடர்ந்து 10 நாட்களாக இளம்பெண் பலாத்காரம்; வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி தொடர்ந்து 10 நாட்களாக இளம்பெண் பலாத்காரம்; வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் 25 வயது இளம்பெண் தொடர்ந்து 10 நாட்களாக ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரைப்போல் மேலும் பலர் அந்த கும்பலால் பாதிப்படைந்துள்ளனர் என அந்தப் பெண் தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த 25 வயது இளம்பெண்ணை காஜல் என்ற மற்றொரு பெண் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஓரிஷாவிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின் காஜலுடன் சேர்ந்த மற்றொரு நபர் அந்த இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தி உள்ளனர்.
கடந்த 10 நாட்களாக அந்த பெண்ணை பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்துவைத்து பலர் அந்த பெண்ணுடன் பலாத்காரமாக உறவு கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அறையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று குரல் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பூரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்தப் பெண்ணைப் போன்ற பல பெண்களும் இந்த நபர்களால் ஏமாற்றப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்த ஒரிசா காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.