இந்தியா வீடியோ

உங்களுக்கு இது தேவைதான்டா! இளைஞர்கள் செய்த காரியத்தால் கடுப்பாகி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! வைரலாகும் வீடியோ!!

Summary:

youngster tease buffalo after they fall into water

இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் வீடியோக்கள் வெளியிடுவது என்பது பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதில் இளைஞர்கள் பலரும் மிகவும் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என பல விபரீத முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. டிக் டாக் வீடியோக்கள் மூலம் சிலர் தங்களது திறமைகளை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி வந்தாலும் சிலர் ஆபாசமாக வீடியோக்களை வெளியிட்டு பார்ப்போரை முகம் சுளிக்கவும்  வைக்கின்றனர். 

 பேஸ்புக், வாட்ஸ் அப் போன்று டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையானவர்கள் பலர். மேலும் வித்தியாசமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாவதற்காக இன்றைய சமூகத்தினர் எத்தகைய எல்லைக்குள் செல்லவும் தயாராக உள்ளனர். 

இந்நிலையில் இளைஞர்கள் இவர்கள் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு எருமை கூட்டம் நின்று கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்த நபர் எருமை ஒன்றினை எட்டி உதைக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது  பைக்  நிலைதடுமாறி எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் தட்டு தடுமாறி கீழே விழுந்தனர்.

மேலும் எருமையை உதைக்க முயன்ற நபர் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. மேலும் பலரும் இது உனக்கு தேவைதான், செய்த வினைக்கு உடனே பலன் கிடைச்சிடுச்சு என்று கிண்டலடித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
 


Advertisement