காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை.. பொதுமக்களின் தர்ம அடியில் இளைஞனுக்கு துள்ளத்துடிக்க சாவு.!



Young Woman Murdered for Rejecting Love in Hyderabad; Accused Beaten to Death by Public

இளம்பெண் தன்னை காதலிக்கவில்லை என கொலை செய்த இளைஞர், ஊரால் கொடுத்த தர்ம அடியால் உயிரைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

காதல் தகராறு:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் செயல்படும் தனியார் பள்ளியில் வைஷ்ணவி என்ற 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேஜா என்ற 30 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது காதலாக மாறி இருக்கிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், தேஜாவின் ஆசை ஒன்றை வைஷ்ணவி நிராகரித்த காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

Crime news

கழுத்தை அறுத்துக்கொலை:

இதனிடையே, ஜட்சர்லா டவுன், பொலிப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வைஷ்ணவி வரவேற்பாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். நேற்று மதியம் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தவர், ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த தேஜா வைஷ்ணவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Crime news

தர்ம அடியில் இளைஞர் சாவு:

இந்த சம்பவத்தில் வைஷ்ணவி சம்பவ இடத்திலேயே அதிக ரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை கண்டு கொதித்துப்போன உள்ளூர் கிராம மக்கள் தேஜாவை சுமார் 400 மீட்டர் தூரம் ஓடிச்சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரது கை-கால்களை கயிறால் கட்டி சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த தேஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!