இந்தியா

மருத்துவமனைக்கு வெளியே நனைந்த படி தரையில் கிடந்த இளம் பெண்! மருத்துவமனையின் அஜாக்கிரதை!

Summary:

Young woman lying outside the hospital

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்திலுள்ள சடார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு முன்பாக மழையில் நனைந்தபடியே, பெண் ஒருவர் தரையிலே கிடந்துள்ளார். அந்த பெண் பல மணி நேரங்களாக மருத்துவமனைக்கு வெளியிலேயே கிடந்துள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை.

அந்த பெண் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு முன்பாக மழையில் நனைந்தபடி கிடப்பதை ஒருவர், அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த புகைப்படம் வைரலானது. இந்த பெண் பற்றிய புகைப்படம் வைரலாக தொடங்கியதும் மருத்துவமனை இவரை அனுமதித்து சிகிச்சையை தொடங்கியுள்ளது.

மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை ட்விட்டரில் பதிவிட்ட நபர் ஒருவர், நான் மருத்துவமனை நிர்வாகத்தினர் பலரிடமும் உதவும்படி கேட்டேன், அவர்கள் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கைவிரித்தனர். இன்னும் கொஞ்சநேரம் அந்த பெண்ணை கவனிக்காமல் விட்டிருந்தால் அவர் இறந்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement