என்னையே காதலித்தேன்; என்னை நானே திருமணம் செய்வேன்: ஆச்சரியமூட்டிய இளம்பெண்ணின் அறிவிப்பு..!
குஜராத்தை சேர்ந்த இளம் பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் தன்னை தானே காதலிப்பதாகவும், ஷமா பிந்துவுக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லை என்றும் . அதனால் Sologamy என்ற முறையில் தன்னைத் தானே மணம் முடித்துக் கொள்ள அவர் முடிவு செய்துளதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதில்லை. ஆனால் மணமகளாக இருப்பது பிடிக்கும்.
அதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். இது குறித்து ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். இது போன்று யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, நாட்டிலேயே சுய காதலுக்கு நான் தான் எடுத்துக் காட்டாக இருப்பேன் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷமா பிந்து.
தனது முடிவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் முழு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறினார். இதனால் அவரது திருமணம் ஜூன் 11-ம் தேதி நடக்கவுள்ளது என்றும், திருமணம் முடிந்த கையோடு இரண்டு வாரம் ஹனிமூன் ட்ரிப்பாக கோவா செல்கிறேன் என்று ஷமா பிந்து தெரிவித்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்படுகிறது.