கொரோனா பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்!

கொரோனா பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்!


young girl abused in hospital

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்த கொரோனா சமயத்தில் சமீப காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் கொடிய சம்பவமும் நடந்து வருகிறது.

டெல்லியில் அமைந்துள்ள மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி, அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி குளியலறைக்கு செல்லும்போது அவரை பின் தொடர்ந்த 19 வயதான இளைஞர் அவரது நண்பரின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

corona

இந்த சம்பவத்தை சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொரோனா பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் டெல்லி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.