இந்தியா

காருக்குள் விளையாடியபோது காரின் கதவு லாக்.! மூச்சுத்திணறி 2 சிறுவர்கள் பரிதாப பலி!

Summary:

young boys died for car door lock

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இந்தநிலையில் அந்த 4 சிறுவர்களும் காருக்குள் அமர்ந்து விளையாடியபோது காரின் கதவு தானாகவே லாக் ஆகியுள்ளது. ஆனாலும் சிறுவர்கள் காருக்குள்ளேயே விளையாடிக்கொண்டிருந்த சிறுது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அருகில் யாரும் இல்லாத நிலையில் காருக்குள் சிக்கிய சிறுவர்கள் மூச்சித்திணறி மயங்கியுள்ளனர். இதனையடுத்து காரின் அருகில் வந்த ஒரு நபர் சிறுவர்கள் காருக்குள் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், பிறரின் உதவியுடன் காரின் கதவை திறந்து காருக்குள் இருந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

ஆனால் அதில் இரண்டு பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காருக்குள் சிக்கி இரண்டு பிஞ்சு உயிர்கள் பிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் தங்களது கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. கொரோனா காரணமாக உலகின் பல நாடுகளில் பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.


Advertisement