தமிழகம்

காதலன் தானே என்று நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பிய பெண்கள்.! இளைஞனிடம் சிக்கிய 300-க்கும் மேற்பட்ட பெண்கள்.!

Summary:

சமூக வலைத்தளங்களில் காதல் வலைவீசி 300 இளம்பெண்களை மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் பரபரப்ப

சமூக வலைத்தளங்களில் காதல் வலைவீசி 300 இளம்பெண்களை மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கிற ராஜா(28). இவர் தன்னுடைய பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளார்.

ராஜா கடந்த 2017ம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலை ஆனார். அதேபோல், கடந்த மாதம் 29ம் தேதி திருட்டு வழக்கில் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரிடம் நடத்திய விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜா திருடுவது மட்டுமின்றி பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இது குறித்து, போலீசார் தரப்பில் கூறுகையில், சமூகவலைத்தளங்கள் மூலம் பல பெண்களிடம் நட்பை ஏற்படுத்துக் கொண்ட, இவன் அதன் பின் அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளான். அவர்களிடம் நன்றாக பழக்கம் ஏற்பட்ட பின், அவர் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் கேட்பதையும், அந்த பெண்களும் காதலன் தானே என்று அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் அதை வைத்தே அவர் பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை பறித்து வந்துள்ளான். அப்படி அவர்கள் பணம் தரவில்லை என்றால், இதை எல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் பெண்களும் பயத்தில் அவன் கேட்பதை கொடுத்து வந்துள்ளனர். கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை என காதல் வலையில் வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


Advertisement