இந்தியா உலகம்

கொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!!

Summary:

நபர் ஒருவரை போலீசார் கைது செய்தபோது, அந்த நபரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க மு

நபர் ஒருவரை போலீசார் கைது செய்தபோது, அந்த நபரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்ற இளம் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் Las Vegas நகர போலீசார், அந்த பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை குப்புறப் படுக்க வைத்து, அவரது கால்களை மடக்கி, அவரது கைங்களில் விலங்கினை மாட்டி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் குற்றவாளியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவரால் அது முடியாமல் போக, அந்த இளம் பெண்ணுடன் வந்த இளைஞர் ஒருவர், அந்த குற்றவாளியின் கழுத்தில் இருந்த சங்கிலியை வேகமாகா இழுத்து அறுக்க முயற்சிக்கிறார். இதனால் குற்றவாளி தனது தலையை அசைக்கவே, நடப்பது குறித்து போலீசார் கவனிக்கின்றனர்.

உடனே, அவனை விடு எனச் சத்தமாகக் போலீசார் கத்த. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கும் அவனை விடு எனச் சத்தம் போடுகின்றனர். ஆனாலும் அந்த இளைஞரும், அந்த இளம் பெண்ணும் அந்த இடத்திலிருந்து  செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

சுற்றிலும் கேமிரா, மக்கள் கூட்டம் மற்றும் போலீசார் இருக்க, அந்த இளைஞரும், இளம் பெண்ணும் எப்படி இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement