இந்தியா

ஆழமான கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த நாய்! வேடிக்கை பார்த்த இளைஞர்கள்! திருமணமான பெண்ணின் நெகிழ்ச்சி சம்பவம்!

Summary:

women saved dog from well

மங்களூரு நகர் எம்.ஜி.ரோடு அருகே ஆழமான கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது.அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த ரஜினி என்ற பெண் ஒருவர், நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கிணற்றின் அருகே வந்து பார்த்தபோது நாய், கிணற்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அந்த பெண் அருகில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துள்ளார். அங்குவந்த இளைஞர்கள் நாயை பார்த்து பரிதாப பட்டார்களே தவிர, அவர்கள் யாரும் கிணற்றுக்குள் இறங்கி நாயை காப்பாற்ற முன்வரவில்லை. சுமார் 2 மணி நேரமாக அந்த நாய் கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்தது. ஆனாலும் விலங்குகளை நேசிக்கும் ரஜினிக்கு நாய் ததைப்பதை பார்த்து பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

அந்த ஆழமான கிணற்றில் படிக்கட்டு கூட இல்லாத நிரையில் அந்த பெண் அவரது இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கியுள்ளார். பின்னர் கிணற்றில் இறங்கிய அவர், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நாயின் இடுப்பில் கயிறு காட்டி, கிணற்றுக்கு மேலிருப்பவர்களை தூக்கி, இழுக்கவைத்து அந்த நாயை மீட்டுள்ளனர். இதனையடுத்து அவரும் மேலே ஏறி வந்துள்ளார். அந்த வாயில்லா ஜீவனை காப்பாற்றிய பெண்ணிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த விடியோவை பார்த்த உங்களுக்கும் அந்த பெண்ணை பாராட்ட மனமிருந்தால் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.


Advertisement