வரலாற்று சாதனை.! கெத்து காட்டும் சிங்கப்பெண்கள்.! விமானத்தில் அனைவரும் பெண்களே..!

வரலாற்று சாதனை.! கெத்து காட்டும் சிங்கப்பெண்கள்.! விமானத்தில் அனைவரும் பெண்களே..!



women pilot team in flight

கேப்டன் சோயா அகர்வால் தலைமையில், தேசிய விமான சேவையான ஏர் இந்தியாவின் அனைத்து மகளிர் பைலட் குழு, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை வட துருவத்தின் மீது பறந்து சுமார் 16,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வரலாற்று சாதனை படைக்க உள்ளது. இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, இந்த ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.

இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு வந்து அடைகிறது. இந்த விமானம்தான், இந்தியாவில் இயக்கப்படும் உலகின் மிக நீண்ட வணிக விமானம் என்றும், இந்த பாதையில் மொத்த விமான நேரம், குறிப்பிட்ட நாளில் காற்றின் வேகத்தை பொறுத்து 17 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறுகிறது.


இந்த முறை சான் பிரான்சிகோவிலிருந்து பெங்களூருவுக்கு துருவ பாதை வழியாக பயணம் செய்வதற்கான பொறுப்பை ஒரு பெண் கேப்டனுக்கு ஏர் இந்தியா வழங்கியுள்ளது. இந்த விமானத்தை இயக்கும் சோயா அகர்வால் 2013 ஆம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை ஓட்டிய இள வயது பெண் விமானி என்ற சாதனையை அவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.