வேகமாக செல்லும் வாகனங்கள்! சாலையில் தவித்த பார்வையற்றவருக்காக பேருந்தின் பின்னால் ஓடிய பெண்! வைரல் வீடியோ!



women help to blind man


கேரள மாநிலத்தில் பார்வையற்ற நபர் ஒருவர் வாகனங்கள் வேகமாக செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் தனது கணவரின் வருகைக்காக காத்திருக்கும் பெண் ஒருவர் அந்த பார்வையற்ற நபருக்கு உதவி செய்ய முயற்சிக்கிறார். 

அந்த சமயத்தில், இவர்களை கவனித்த பேருந்து ஒன்று சற்று தள்ளிச் சென்று நிற்கிறது. உடனே பெருந்தின் அருகே ஓடிச் சென்ற அந்த பெண், பார்வையற்ற நபருக்காக கொஞ்சம் காத்திருங்கள் என கூறி, திரும்பவும் அந்த பார்வையற்றவரின் அருகாமைக்கு ஓடி வந்து, அந்த பார்வையற்றவரை கையைப்பிடித்து அழைத்து வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு செல்கிறார். 

இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. அங்கு நடந்த செயலை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பரபரப்பான வாழ்கை முறையில் பிறருக்காக வாழும் அன்னைதெரஸாக்களும் நம் நாட்டில் வாழ்கின்றனர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.