இந்தியா

தீ பற்றி எரியும் நெருப்புடன் பானி பூரி சாப்பிடும் இளம்பெண்! வைரலாகும் வீடியோ காட்சி...

Summary:

தீ பற்றி எரியும் நெருப்புடன் பானி பூரி சாப்பிடும் இளம்பெண்! வைரலாகும் வீடியோ காட்சி...

தீ பற்றி எரியும் நெருப்புடன் பானி பூரி சாப்பிடும் பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள தெரு கடையில் ஒன்றில் பானி பூரியின் மேல் நெருப்பை பற்றவைத்து நேரடியாக பெண் ஒருவர் வாயிற்குள் போடுகிறார். இத்தகைய பானிபூரி, பையர் பானி பூரி  என்ற பெயரில் குஜராத்தில் ஸ்பெஷல் ஆக கிடைக்குமாம்.

குறிப்பிட்ட இந்த வீடியோவை க்ருபாலினி படேல் என்கிற பெண்மணி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவிற்கு லைக்ஸ் குவியும் அதேநேரத்தில், நெருப்பினால் எதுவும் ஆபத்து நிகழாதா? எதற்காக நெருப்புடன் இப்படி விளையாடுகிறீர்கள் என பலரும் பலவிதமான எதிர்மறை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

 

 


Advertisement