நாட்டில் முதன்முறையாக மகளிர்தின ஸ்பெஷல்! பெண்களுக்காகவே வருகிறது தனி பார்! அதுவும் எங்கு தெரியுமா?

நாட்டில் முதன்முறையாக மகளிர்தின ஸ்பெஷல்! பெண்களுக்காகவே வருகிறது தனி பார்! அதுவும் எங்கு தெரியுமா?



women bar opened in bengaluru for women day special

இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். மேலும் நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களுக்காக தனி பேருந்து, ரயில், காவல் நிலையம், துணிக்கடை என பலவும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நாட்டில் முதல் முறையாக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி பெண்களுக்காக பெங்களூரில் தனியாக பார் மற்றும் உணவகம் திறக்கப்பட உள்ளது. பெங்களூரு பிரிகேட் சாலையில் 2,500 சதுர அடியில் பெண்களுக்காக மட்டுமே தனியாக பார் மட்டுமின்றி உணவகமும் கட்டப்பட உள்ளது. மேலும் இந்த பார்க்கு மிட் அண்ட் மிஸ் பார்  அண்ட் ரெஸ்டாரன்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாரில் சமைப்பவர்கள், பணியாளர்கள், பவுன்சர்கள் மற்றும் பார் உரிமையாளர் என அனைவரும் பெண்களாகவே இருப்பர். 

bar

 மேலும் இந்த பாரில் நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு ஒருமணி வரை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து இந்த பாரின் உரிமையாளர் பஞ்சூரி வி சங்கர் கூறுகையில்,வாடிக்கையாளர்களின் வரவேற்பை  பொறுத்து இதுபோன்ற உணவகங்கள் நகரம் முழுவதும் திறக்கப்படும் என்று கூறியுள்ளார் .