8-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்படுகிறதா! தமிழிசை விளக்கம்

8-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்படுகிறதா! தமிழிசை விளக்கம்



Will hindi be forced in schools

மத்திய அரசு நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என்று அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த செய்தி பொய் என மத்திய அமைச்சர் விடுதுதள்ள செய்திக்கு தமிழிசை விளக்கமளித்துள்ளார். 

ஹிந்தியை கட்டாயம் ஆக்குவதற்காக மத்திய குழு புதிய பரிந்துரையை செய்துள்ளதாகவும், அடுத்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், மத்திய அரசு இதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

bjp

இதனால் நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என்று அறிவிக்கப்பட போகிறதா என பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பரவும் செய்தி பொய்யானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் வடேகர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் விளக்கமளித்துள்ள பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “8ம் வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாயம் என்று மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் அறிவித்ததுபோல் ஒரு செய்தி வெளியிடப்படுகிறது.இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று மாண்புமிகு திரு. @PrakashJavdekar அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.” என பதிவிட்டுள்ளார். 

மேலும் எந்த மொழியையும் படிப்பதற்கு கட்டாயப்படுத்தபட மாட்டாது என்றும் சில ஊடகங்களால் தவறான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் இதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.