வெளிநாடு அழைத்து செல்லாததால் கணவரை குத்திக் கொன்ற மனைவி.!



Wife killed husband for not abroad

வெளிநாடு அனைத்து செல்லாததால் கணவரை குத்தி மனைவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து செய்வதும், கள்ளக்காதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், சில அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

Pune

இந்த நிலையில் தன்னை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாததால் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, புனேவில் உள்ள மனைவி ஒருவர் பிறந்தநாள் கொண்டாட துபாய் அழைத்துச் செல்லும்படி தனது கணவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் கணவர் அவரை துபாய் அழைத்து செல்லவில்லை.

Pune

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவர் மீது கத்தியால் கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.