கள்ளக்காதலனுடன் சடுகுடு.. நேரில் பார்த்த கணவனுக்கு எமனான பயங்கரம்.. கழுத்தை கயிற்றால் இறுக்கி கதறக்கதற கொலை..!
மனைவி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதை கணவர் பார்த்ததால், திட்டமிட்டு அவரை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பூர்னியா சகர்படா கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி தேவி. தம்பதிகளுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனைத்தொடர்ந்து தேவி அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்த் மஹால்தாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நிலையில், இவர்கள் இருவரும் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
அப்போது ஒரு நாள் தேவி, தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கணவர் குமார் பார்த்த நிலையில், மனைவி தனது கள்ளக்காதலனிடம் 'என் கணவர் நம்மை பார்த்துவிட்டார். அவரை உயிரோடு விட்டால் நமக்கு பெரும் ஆபத்து. எனவே, அவரை நாம் இருவரும் சேர்ந்து கொன்று விடலாம்' என திட்டத்தை கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் சேர்ந்து கயிறு ஒன்றினை வைத்து கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின் எதுவும் தெரியாதது போல் 'என் கணவர் இறந்து விட்டார்' என்று அக்கம்பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளக்காதல் தகராறில் இருவரும் சேர்ந்து கணவனை கொன்றது தெரியவந்தது. இதனால் இவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.