இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
தாலியை விற்று கணவரின் இறுதி சடங்குகளை செய்த ஆம்புலன்ஸ் டிரைவரின் மனைவி! சில நாட்களில் அவருக்கு வந்த ஆறுதலான செய்தி!
கர்நாடகாவை சேர்ந்தவர் உமேஷ் ஹடவள்ளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 12 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். உமேஷ் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், அவர் இரவு பகல் பாராமல் அயராமல் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் கணவரின் இறுதி சடங்குகள் செய்யக்கூட பணம் இல்லாமல் தவித்து வந்த அவரது மனைவி தனது தாலியை அடகு வைத்து இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் உமேஷின் மனைவி, தனது கணவர் இடைவிடாத கொரோனா அவசர பணியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் எனவும், பணம் இல்லாமல் தான் படும் கஷ்டத்தையும் தனது குழந்தைகளுக்காக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் அவருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்குவதாகவும், காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட ஊழியருக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் விரைவில் கிடைக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். இந்த உதவி உமேஷின் மனைவிக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.