இந்தியா

திருமணமான 15 நாளில் மனைவியை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன்.! மனைவியின் துணிச்சல் செயல்.!

Summary:

திருமணமான 15 நாட்களில் மனைவியை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன், ஊருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் பிந்துஸ்ரீ என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த 15 நாளில் சுரேஷ் வேலை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டார். மேலும், தனது மனைவி பிந்துஸ்ரீயை விரைவில் ஆஸ்திரேலியா அழைத்துச்செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலியா சென்ற சுரேஷ் அவரது மனைவி பிந்துஸ்ரீயை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்தநிலையில், பிந்துஸ்ரீயை சுரேஷின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. வேதனையடைந்த பிந்துஸ்ரீ தனது கணவர் பற்றி தகவல் தெரியவில்லை மாமனார், மாமியார் கொடுமை செய்கிறார்கள் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள சுரேஷை சொந்த ஊருக்கு வரவழைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து  சுரேஷ் பணிபுரியும் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் சுரேஷ். இதனையடுத்து சுரேஷ் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


Advertisement