நான் இருக்கும்போது இன்னொரு திருமணமா? இளம்மனைவி எடுத்த விபரீத முடிவு! அடுக்கடுக்காக வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

நான் இருக்கும்போது இன்னொரு திருமணமா? இளம்மனைவி எடுத்த விபரீத முடிவு! அடுக்கடுக்காக வெளியான அதிர்ச்சி தகவல்கள்!


Wife commit suicide for dowry torture

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்.  32 வயது நிறைந்த இவர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்ற 25 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதம் பாரதி உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன், உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்,   பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாரதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கணவர் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கூறியுள்ளனர்.

suicide

இந்நிலையில் பாரதியின் பெற்றோர்கள் ஸ்ரீதரின் குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் அதிர்ச்சி புகார் அளித்துள்ளனர். அதில்  திருமணத்தின் போது கிட்டத்தட்ட 200 கிராம் தங்கம் மற்றும் இருசக்கர வாகனம் வரதட்சணையாக அளித்தோம். ஆனால் இன்னும் அதிகமாக வரதட்சனை வேண்டும் என்று பாரதியை ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் எங்களையும் மிரட்டினர். 
மேலும் பணம் தரவில்லை என்றால் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்துகொள்வேன் எனவும் மிரட்டினார். 

 கண்டிப்பாக எனது  மகளை அவர்கள்தான் தீவைத்து எரித்து  கொன்றுவிட்டு தற்போது தற்கொலை என நாடகமாடுகின்றனர் என்று புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலிசார்கள்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.