அடக்கொடுமையே.. அதுக்காகவா இப்படி?? கணவர் குர்குரே வாங்கி தராததால் மனைவி எடுத்த ஷாக் முடிவு!!wife-ask-divorce-for-husband-not-buying-kurkure

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே என்றால் மிகவும் பிடிக்குமாம். குர்குரேக்கு அடிமையான அவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பாக்கெட்டாவது வாங்கி வந்து சாப்பிட்டு விடுவாராம். அவரது கணவரும் தினமும் அவருக்கு குர்குரே வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அவரது கணவர் குர்குரே பாக்கெட் வாங்கி வர மறந்துள்ளார்.

குர்குரேவால் வெடித்த தகராறு 

இந்த நிலையில் இருவருக்கு வாக்குவாதம் அதிகரித்துள்ளது. தனது கணவரை பிரிய முடிவெடுத்த அந்தப் பெண் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் தனது கணவரிடம் விவாகரத்தும் கேட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அந்தப் பெண் குர்குரே விவாகரத்தை மறைத்து கணவன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்; 5 பேரின் சிறுநீரை குடிக்கவைத்து அதிர்ச்சி செயல்.!

Kurkure

கவுன்சிலிங் சென்ற தம்பதியினர் 

இதனை கணவர் மறுத்த நிலையில், அவர்கள் குடும்பநல ஆலோசனை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து குடும்ப நல. ஆலோசகர், அந்தப் பெண்ணுக்கு குர்குரே மீதிருந்த அலாதி பிரியமே அவர் கணவரைப் பிரிய காரணம். இருவருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்; திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்.!