கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்; 5 பேரின் சிறுநீரை குடிக்கவைத்து அதிர்ச்சி செயல்.!Uttar Pradesh Badaun Youth Abused by Local Villagers after Caught by Women Husband 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவுன் மாவட்டம், தர்சண்ட் பகுதியை சேர்ந்தவர் தர்சந்த். இதே கிராமத்தில் வசித்து வரும் இளைஞர், டெல்லியை சேர்ந்த பெண்ணை மணம்முடித்து வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கும் - தர்சந்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்

இந்த பழக்கமானது இவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறவே, இருவரும் பல நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் 5 உறவினர்கள் சேர்ந்து இளைஞரை தண்டிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: 2 ஆண் நண்பர்களுடன் தனிமையில் உல்லாசம்; நேரில் சென்று வெளுத்தெடுத்த கணவன்.. காவல்துறை வைத்த ட்விஸ்ட்.!

இளைஞர் தர்சந்தை அனைவரும் சேர்ந்து தாக்கி, கழுத்தில் செருப்பு மாலை இட்டு ஊர்வலம் அழைத்து வந்துள்ளனர். பின் பெண்ணின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் சிறுநீர் இருந்து, அதனை குடிக்கவும் வழங்கி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு எதிராக இருந்த கணவர் ஆணுறுப்பு நசுக்கி கொலை; மனைவி, ஆண் நண்பர் வெறிச்செயல்.!