3 மாத திருமண வாழ்க்கை!,.. நடுவில் ஒரு கள்ளக்காதல்!,, கணவனை கொன்று நாடமாடியது அம்பலம்..!

3 மாத திருமண வாழ்க்கை!,.. நடுவில் ஒரு கள்ளக்காதல்!,, கணவனை கொன்று நாடமாடியது அம்பலம்..!


Wife arrested along with counterfeiter for murdering husband

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டம் பட்னபூர் பகுதியை சேர்ந்தவர் கிரண் லோக்ஹண்டி (25). இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மனீஷா (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் பட்னபூரில் உள்ள அம்பட் ரோடு பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே, கடந்த 1 ஆம் தேதி கிரண் தனது வீட்டில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்ய சென்ற தனது கணவர் கிரண் சென்றபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு அவர் மரணமடைந்ததாகவும் மனீஷா கூறினார். இதனை தொடர்ந்து விபத்து என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கிரண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் வழக்கறஞர் சங்கத்தினர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், கிரணை அவரது மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ததை கண்டறிந்தனர். மனீஷாவுக்கும் அவரது ஊரை சேர்ந்த கணேஷ் மித்து அக்லவி (23) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனீஷாவுக்கு திருமணம் நடந்த நிலையில் கணேஷ் தொடர்ந்து மனீஷாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். இது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக, கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழவேண்டும் என எண்ணிய மனீஷா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். திட்டமிட்டபடி கடந்த 1 ஆம் தேதி தனது கள்ளக்காதலன் கணேஷை வீட்டிற்கு வர வைத்த மனீஷா, அங்கு வைத்து கிரணை மனீஷாவும் அவரது கள்ளக்காதலர் கணேஷும் கொடூரமாக கொலை செய்துவிட்டு பின்னர் கியாஸ் சிலிண்டர் வெடித்தது போல் நாடகம் அரங்கேற்றியுள்ளனர். இதையடுத்து, கணவர் கிரணை கொலை செய்ததாக, கள்ளக்காதலன் கணேஷுடன் சேர்ந்து மனிஷாவை கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.