இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இது தான் காரணம்.! உண்மையை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு.!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இது தான் காரணம்.! உண்மையை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு.!


who-talk-about-corona-increased-in-india

உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலில் அடிபட்டு, தற்போது மெல்ல, மெல்ல மீண்டும் வரும் நிலையில், இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் தீவிரத்துக்கு பி.1.617 என்ற இரட்டை உருமாற்ற வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ் மீண்டும் பரவி வருவதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் பி.1.617.1வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.