மைனர் சிறுமி சடலமாக மீட்பு.. 19 வயது இளைஞர் கைது.. மேற்குவங்கத்தில் பதற்றம்.!
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கே மேற்குவங்கத்தில் இருந்து விலகாத நிலையில், அடுத்ததுயரம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் (31) சமீபத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது, நீதிமன்றம் வழக்கை கண்காணிக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: மேற்குவங்கம் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலக மம்தா பானர்ஜி முடிவு? - பரபரப்பு அறிவிப்பு.!
இதனிடையே, பயிற்சி வகுப்புக்கு சென்று வந்த இளம்பெண் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள தெற்கு பர்கானா மஹிஷாமாரி பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர், பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார், பின் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
சிறுமி கொலை
இதனால் பதறிப்போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 03:30 மணியளவில் சிறுமியின் உடல் பல்வேறு காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக முஸ்தாகின் சர்தார் என்ற 19 வயதுடைய இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், மாணவியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக போராட்டமும் வெடித்துள்ளது. பல இடங்களில் காவல்துறை வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் உடலுறவு; பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்து துள்ளத்துடிக்க பெண் பலி.. காரணம் என்ன?..!