பல் வலி..! லிப்டுக்குள் போன தொழிலதிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! நடுங்கவைக்கும் இறுதி நிமிடங்கள்.!

பல் வலி..! லிப்டுக்குள் போன தொழிலதிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! நடுங்கவைக்கும் இறுதி நிமிடங்கள்.!



Vishal Mevani lift accident death news

மும்பையை சேர்ந்த பிரபல எலக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் லிப்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் மிகவும் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் ஒன்று கோகினூர் எலக்ட்ரானிக்ஸ். இந்த கடையின் இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் விஷால் மேவானி. 46 வயதாகும் விஷால் மேவானி தெற்கு மும்பையில் உள்ள வசித்து வந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களாக பல் வலி ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து தனது நண்பரிடம் கூறி உள்ளார் விஷால் மேவானி. பல் மருத்துவர் ஒருவர் தனது வீட்டிற்கு வருவதாகவும் அவரிடம் வந்து சிகிச்சை பெறுமாறு விஷால் மேவானி நண்பர் ஒருவர் அவரைத் தனது வீட்டிற்கு வர கூறியுள்ளார். 

இதனையடுத்து தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு சென்றுள்ளார் விஷால் மேவானி. மாலை நான்கு முப்பது மணி அளவில் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற விஷால், தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதற்காக தரைத்தளத்தில் உள்ள லிஃப்டுக்காக காத்திருந்து உள்ளார்.

இந்நிலையில் லிப்ட் தரைதளத்திற்கு வருவதற்கு முன்னதாகவே லிப்ட் கதவு திறந்துள்ளது. இதனால் லிப்ட் கீழே வந்து விட்டது என நினைத்து உள்ளே சென்றே விஷால் மேவானி, சுற்றுமுற்றும் பார்த்தபோது லிஃப்ட் இன்னும் கீழே வரவில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்துள்ளார். ஆனால் மேல் இருந்து கீழே இறங்கிய லிப்ட் அவரை உள்ளே வைத்து நசுக்கி உள்ளது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லிப்டில் சிக்கியிருந்த விஷால் மேவானியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபல தொழிலதிபர் ஒருவர் லிப்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.