இந்தியா சினிமா விளையாட்டு

ஒரு ஆணி கூட புடுங்க முடியாது! கோபத்தில் கொதித்தெழுந்த நயனின் காதலன்.! ஏன் தெரியுமா?

Summary:

vignesh sivan angry to remove dhoni from india team

டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியிலிருந்து தோனியின் பெயர் நீக்கப்பட்டதால் ஆவேசமான இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பெயர்களை  நேற்று பிசிசிஐ அறிவித்தது.

 அதில் தோனியின்  பெயர் இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துபோய் உள்ளனர்.

இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் டி 20 போட்டிகளில் தோனியின் பெயர் நீக்கப்பட்டதால் பெரும் ஆத்திரமடைந்துள்ளார்.
    மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதயம் நொறுங்கியது. தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி20 அணியா? மோசமான அணித்தேர்வு குழு. பிசிசிஐ உங்களை ஆண்டவன் தான் காப்பாற்றணும். தலைவன் தோனி இல்லாமல் ஆணியக் கூட புடுங்க முடியாது.  தெரிந்துக் கொள்ளுங்கள் என கோபமாக பதிவிட்டுள்ளார்.


Advertisement