ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
பாம்பு பிடித்த போது வாவா சுரேஷ் செய்த தவறுகள் என்ன?? வெளியான அதிர்ச்சி வீடியோ...
பாம்பு பிடித்த போது வாவா சுரேஷ் செய்த தவறுகள் என்ன?? வெளியான அதிர்ச்சி வீடியோ...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மிகவும் லாவகமாக பிடித்துள்ளார். அதில் ராஜாநாகம் வகை பாம்புகளும் அடங்கும்.
பாம்புகளை மிகவும் லாவகமாக பிடிக்கும் சுரேஷ் அண்மையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த நாகத்தினை பிடிக்க சென்றபோது சுரேஷை பாம்பு கடித்தது . வாவா சுரேஷ் அந்த பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு சுரேஷின் முழங்காலில் கடித்துள்ளது.
வாவா சுரேஷ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவே அவர் மீண்டு வருவதற்கு பிரார்த்தனை செய்து வருகின்றது. இந்நிலையில் வாவா சுரேஷ் நல்ல பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது செய்த தவறுகள் என்னவெல்லாம் என்பது குறித்து தற்போது ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...