50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள்...அசல்டாக பாம்புகளை பிடிக்கும் பாம்பு பிடி மன்னனுக்கு நொடியில் நிகழ்ந்த சம்பவம்...பரபரப்பு காட்சி.!

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள்...அசல்டாக பாம்புகளை பிடிக்கும் பாம்பு பிடி மன்னனுக்கு நொடியில் நிகழ்ந்த சம்பவம்...பரபரப்பு காட்சி.!


vava-suresh-is-critical-after-being-bitten-by-a-cobra

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மிகவும் லாவகமாக பிடித்துள்ளார். அதில் 200க்கும் மேற்பட்ட பாம்புகள் அரிய வகை ராஜநாகம் மற்றும் நல்ல பாம்பு வகையை சேர்ந்தது.

பாம்புகளை மிகவும் லாவகமாக பிடிக்கும் சுரேஷ் அண்மையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சி குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து உடனே அங்கு சென்றுள்ளார்.


நல்ல பாம்பை பிடித்து பைக்குள் போட சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு சுரேஷின் முழங்காலில் கடித்துள்ளது. பாம்பு கடித்த பின்பும் விடாமல் அந்த பாம்பை பைக்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். 

அதனையடுத்து அதே பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் பரவ பலரும் அவர் மீண்டு வர வேண்டும் என கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.