இந்தியா Covid-19

ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!

Summary:

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவில், "எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில். கொரோனா தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு நீங்களாகவே பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.


Advertisement