
Summary:
மதுபானத்திற்கு பணம் கேட்ட உரிமையாளரின் கைவிரலை கடித்து துப்பிய பயங்கரம்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர், ஜன்ஸாத் பகுதியில் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபானக்கடை பாரில் உள்ளூரை சேர்ந்த சுனில் குமார், அவரின் நண்பர்களுடன் மதுபானம் அருந்தியுள்ளார்.
இவர்கள் குடித்த மதுபானத்திற்கான தொகையை, கடை உரிமையாளர் அசோக்குமார் கேட்கவே இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுனில் குமார், அசோக் குமாரின் கை விரல்களை கடித்து துப்பியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சுனில் குமார் மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அசோக் குமார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement