16 வயது சிறுமி பலாத்காரம்; வீடியோ எடுத்து வெளியிட்ட கயவன் கைது.!Uttar Pradesh Muzaffarnagar Girl Abuse 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில், 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வாசிம் என்பவர் கரும்பு தோட்டத்தில் வைத்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். 

இதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட வாசிம், பலாத்காரம் குறித்து வெளியே கூறினால் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிவிடும் எனவும் கூறி இருக்கிறார். 

இதனிடையே, கடந்த சனிக்கிழமை சிறுமியின் பலாத்கார காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வாசிமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.