5 வயது சிறுவனை கீழே தூக்கிப்போட்டு கொன்ற முதியவர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் பதைபதைப்பு காட்சிகள்.!

5 வயது சிறுவனை கீழே தூக்கிப்போட்டு கொன்ற முதியவர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் பதைபதைப்பு காட்சிகள்.!


Uttar Pradesh Moradabad 5 aged child Killed by Aged Man 

 

கடைவீதியில் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருந்த சிறுவனின் புன்னகை மறைவதற்குள் கொடூர கொலை நடந்து முடிந்தது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத், ராம்பூர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் அங்கித். சிறுவன் கடந்த சில ஆண்டுகளாக தனது பெற்றோருடன், மதுராவில் உள்ள ராதாகுண்ட் பகுதியில் உள்ள தாத்தா கமல் சைனியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சிறுவன் வீட்டின் வெளியே கடைவீதி பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சிறுவனின் தாத்தா கமல் சைனி, திடீரென சிறுவனை உயரே தூக்கி கீழே போட்டு இருக்கிறார். 

இதனால் படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு போராடி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினர். பின் அவசர ஊர்திக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர்பிரிந்துவிட்ட நிலையில், கமல் சைனி காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.