மகள் காதலை கைவிடாததால் "ஆணவ கருணைக்கொலை"க்கு தயாரான தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் தகப்பனின் விபரீத செயல்.!

மகள் காதலை கைவிடாததால் "ஆணவ கருணைக்கொலை"க்கு தயாரான தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் தகப்பனின் விபரீத செயல்.!


uttar-pradesh-meerut-father-attempt-to-kill-daughter-sh

கண்டித்தும் காதலை கைவிடாத மகளை தந்தை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயற்சித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண்ணின் உயிர் காதலால் ஊசலாடி வரும் பக்கீர் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் வாசித்து வருபவர் நவீன் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, மகள் இருக்கின்றனர். இவரின் மகள் இளைஞன் ஒருவரை காதலித்து வந்த நிலையில், நவீனுக்கு இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. மகளின் காதலை அறிந்த நவீன்குமார் கண்டித்து இருக்கிறார். 

இதனைகண்டுகொள்ளாத மகள் தொடர்ந்து தனது காதலருடன் பேசிவந்த நிலையில், சம்பவத்தன்று நவீன் தனது மகள் காலில் அடிபட்டுவிட்டதாக கூறி மருத்துவமணியல் அனுமதி செய்துள்ளார். மேலும், மருத்துவமனையில் மகள் வீட்டின் மாடியில் இருந்த போது குரங்கை பார்த்து பயந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் போதே மற்றொரு மருத்துவமனைக்கு பெண் மாற்றப்பட்டுள்ளார். 

Uttar pradesh

அங்கு பெண்ணின் உடல்நிலை மோசமடையவே, இரத்த பரிசோதனை செய்ததில் உடலில் இரத்தம் கலந்திருப்பது உறுதியானது. அவரின் உடலில் விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு கலக்கப்பட்டது தெரியவரவே, காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி நிகழ்விடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர். 

மருத்துவமனை சி.சி.டி.வி-யும் கவனிக்கப்பட்ட நிலையில், மருத்துவரின் உடையில் பெண்ணின் அறையில் மர்ம நபர் நுழைந்தது உறுதியானது. இதனையடுத்து, அங்க அடையாளத்தை வைத்து வார்டு பாய் நவீன் குமாரை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பேரதிச்சி தகவல் அம்பலமானது. அதாவது, பெண்ணின் தந்தை நவீன் வார்டு பாய் நரேஷுக்கு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து மகளுக்கு பொட்டாசியம் குளோரைடு ஊசியை செலுத்த சொல்லியுள்ளார் என்பது தெரியவந்தது.

Uttar pradesh

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன காவல் துறையினர் பெண்ணின் தந்தை நவீனை கைது செய்து விசாரணை நடத்தியதில், மகள் காதலை கைவிடும்படி கூறியும் கேட்காத காரணத்தால் விஷ ஊசி போட்டு கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமானது. இதனையடுத்து, இளம்பெண்ணின் தந்தை நவீன், வார்டு பாய் நரேஷ், மருத்துவமனை பெண் ஊழியர் என 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெண் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் இருக்கிறார்.