கள்ளகாதலிக்காக தாலிகட்டிய மனைவியின் மூக்கை அறுத்த கணவன்; சிறையில் கம்பி எண்ணும் பரிதாபம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்த்தவர் விக்ரம். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.
விக்ரமுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் அவரின் மனைவிக்கு தெரியவந்து, இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, விக்ரம் தனது மனைவியின் மூக்கை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக விக்ரமின் மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.