"ஒரே கிளிக்கில் எல்லாம் போச்சு"., இவர்கள் தான் டார்கெட்.. லோன் வேண்டும் என மெசேஜ் வருகிறதா?.. பெண்களே உஷார்..! Uttar Pradesh Lucknow Women Cyber Scam 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை சேர்ந்த பெண்மணிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குறுகிய காலத்தில் லோன் வேண்டுமா? என்ற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதனை பெண்மணி திறந்து, அதில் அனுப்பப்பட்ட லிங்கை தொட்டுள்ளார். பின் அதனை அப்படியே வைத்துவிட்ட நிலையில், பெண்மணியின் வங்கிக்கணக்கில் மறுநாள் ரூ.3 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. 

அவரை அழைத்த மர்ம நபர், நீங்கள் ஆன்லைன் லோன் எடுத்துள்ள காரணத்தால், 10 நாட்களில் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். பெண்மணி தான் லோன் வாங்கவில்லை என கூறியும் பலன் இல்லை. 

பின்னர், மறுநாளில் ரூ.6 ஆயிரம் பணம் அனுப்பி வைக்கப்பட்டு, மொத்தமாக ரூ.15 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் வாங்காத லோனுக்கு எதற்காக பணம் செலுத்த வேண்டும்? என பெண்மணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கும்பல் உனது செல்போனில் இருக்கும் போட்டோவை நாங்கள் எடுத்துவிட்டோம். செல்போனில் இருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் ஆபாசமாக அதனை சித்தரித்து அனுப்புவோம் என மிரட்டி இருக்கின்றனர். 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி சுதாரித்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.